அண்ணன் வரார் வழி விடுங்க.. விஜய் மீது புகார் கொடுத்து கொந்தளித்த சமூக ஆர்வலர் – என்ன விஷயம்?..

Author: Vignesh
20 April 2024, 1:47 pm

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். விஜய் அரசியலுக்கு செல்லும் காரணத்தினால் தளபதி 69 தான், தன்னுடைய கடைசி படம் என அறிவித்து உள்ளார். இப்படத்திற்கு பின் விஜய் சினிமாவில் இருந்து விலக முழு நேர அரசியலில் பணியாற்ற உள்ளார்.

Vijay - Updatenews360

தமிழக வெற்றி கழகத்தின் வேலைகளில் மும்மரமாக இருக்கும் விஜய் கோட்படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றிருந்தார். தற்போது, நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடி மையத்திற்கு எப்போது வருவார் என்று தமிழக முழுவதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

Vijay - Updatenews360

மேலும் படிக்க: என்ன விடாம அஜித்தை அனுப்புறீங்க.. கடுப்பான 82 வயது சீனியர் சிட்டிசன்..!

இந்நிலையில், விஜய் விமான நிலையத்திலிருந்து நீலாங்கரையில் இருக்கும் வீட்டிற்கு வருவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு வெள்ளை சட்டை அணிந்து காரில் சென்று தன்னுடைய ஓட்டினை போட்டு இருக்கிறார். அதுவும், கையில் காயம் ஏற்பட்டு மருத்துவ டேப் போட்டு ஓட்டினை செலுத்தி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் தளபதிக்கு என்ன ஆச்சு என்று ஷாக்கிங் ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

மேலும் படிக்க: தப்பு தப்பா பேசாதீங்க.. அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு- ஓபனாக பேசிய ஜாக்குலின்..!

இது ஒரு புறம் இருக்க தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் மீது சமூக ஆர்வலர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், தேர்தலில் ஓட்டு போட நடிகர் விஜய் 200க்கும் அதிகமானவர்களுடன் வந்தார் என்றும், தேர்தல் விதிகளை மீறி நடந்து கொண்டார் என்று சமூக ஆர்வலர் ஒருவர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மேலும், விஜயை சுற்றி இருந்த தொண்டர்கள் அண்ணன் வரார் வழி விடுங்க.. அண்ணன் வரார் வழி விடுங்க என்று கத்திக்கொண்டே சென்று பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் வீதிகளை மீறிய தவெக தலைவரும், நடிகருமான விஜய் மீது இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி 143, 290, 357, 171(F) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!