TNPSC முக்கிய அறிவிப்பு.. குரூப் 1 முதல் குரூப் 4 வரை முக்கிய தேர்வுகளின் தேதி இதோ..!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2024, 9:48 pm

TNPSC முக்கிய அறிவிப்பு.. குரூப் 1 முதல் குரூப் 4 வரை முக்கிய தேர்வுகளின் தேதி இதோ..!!!

ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கோர் எழுதும் மிக முக்கிய போட்டித்தேர்வாக உள்ள குரூப் 4 (Group 4) தேர்வு தேதியினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC) அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 காலி பணியிடங்களுக்கும் காலிப்பணியிட அறிவிப்பானை கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதற்கான தேர்வு தேதியினை TNPSC அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஜூன் மாதம் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரே நாளில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ரேஷன் அரிசி கடத்தலை தட்டிக் கேட்டவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. CM ஸ்டாலின் மீது EPS பாய்ச்சல்!

அதே போல TNPSC சார்பில் நடைபெறும் மற்ற முக்கிய தேர்வுகளின் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. குரூப் 1 முதன்மை தேர்வு (90 காலிப்பணியிடங்கள்) – வரும் ஜூலை 13ஆம் தேதியும், குரூப் 1B, 1C முதன்மை தேர்வு (29 காலிப்பணியிடங்கள்) வரும் ஜூலை 12ஆம் தேதியும், டிகிரி அளவிலான துறைரீதியான TNPSC தேர்வு (105 காலிப்பணியிடங்கள்) வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதியும், குரூப் 2, 2A (2030 காலிப்பணியிடங்கள்) வரும் செப்டம்பர் 28ஆம் தேதியும், 50 பணியிடங்களுக்கான Assistant Public Prosecutor Grade II in Prosecution Department (Preliminary) தேர்வு பற்றிய அறிவிப்பு செப்டம்பர் 13ம் தேதி வெளியிடப்படும். இதற்கான தேர்வு டிசம்பர் 12ம் தேதி நடைபெற உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!