யாருடா நீங்கெல்லாம்?; பிரபல இயக்குனரை திட்டிய திரௌபதி இயக்குனர்,..

Author: Sudha
22 July 2024, 1:01 pm

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி சென்னையில் அவரது வீட்டுக்கு அருகில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இவ்வழக்கில் 15 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்து கொண்டார்.

பா.ரஞ்சித் பேசும் போது அறவழியில் போராடிக் கொண்டு இருக்கும் எங்களை காயப்படுத்த வேண்டாம். ஆம்ஸ்ட்ராங் அண்ணா கொலை வழக்கில் பல மறைமுக சூழ்ச்சிகள் இருக்கிறது. அதை காவல் துறையினர் கண்டு பிடிக்க வேண்டும். “ என ஆவேசமாக பேசினார்.

இந்நிலையில் இயக்குநர் பா. ரஞ்சித் பேச்சை குறிப்பிடும் வகையில் இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதில், ”என்னங்கடா இது. சினிமால வர்ற டயலாக் எல்லாம் மேடையில பேசுறீங்க? எப்ப பார்த்தாலும் ரவுடி நாங்க தான், பத்து கேஸ் வாங்க போறது நாங்க தான், மெட்ராஸ் நாங்க தான்னு கூவுறீங்க.. நாங்க எல்லாம் யாருதான்டா அப்ப சென்னையில.. அடுத்தவன் வரலாற சினிமால மாத்தி சொன்னது பத்தாதுன்னு இப்ப மேடையில வேற” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இப்போது பிரபலமாகி வருகிறது.

  • chinmayi gives strong reply for controversy on ranbir kapoor eating beef மாட்டுக்கறி சாப்புட்டு இராமரா நடிக்கலாமா? சர்ச்சைக்குள் சிக்கிய ரன்பீர் கபூர்! சின்மயியின் தரமான பதிலடி!