கஞ்சா பாக்கெட் பாக்கெட்டாக சப்ளை.. 15 கிலோ பொட்டலத்துடன் சிக்கிய பலே ஆசாமிகள்..!

Author: Vignesh
31 August 2024, 4:49 pm

திருப்பூரில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஐந்து வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி 15 வேலம்பாளையம் சாமுண்டிபுரம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் உதவி ஆணையர். அணில் குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

Cannabis

அப்போது, வீடு ஒன்றில் 15 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது இதனை தொடர்ந்து 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பதுக்கி வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சகோர் மகானந்தா 26 பிங்கு பிபார் 20 சிபா மகானந்தா 32 சுப்ராட் பெரோ 21 நித்ய நந்தா போரிடா 26 என்ற 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!