கோவையில் தனியார் கல்லூரி மாணவர் விடுதியில் இருந்து சடலமாக மீட்பு : விசாரணையில் திக் திக்!

Author: Udayachandran RadhaKrishnan
24 October 2024, 7:28 pm

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பெரிய சோறை பூமி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் சேலம் மாவட்டம் எடப்பாடி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

இவரது மகன் ரிஷி பிரியன் ( 17). இவர் கோவை பீளமேடு அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

கல்லூரியில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு மாணவர் ரிஷி பிரியன் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையும் படியுங்க: சென்னையை விட மதுரையில் தாறுமாறு வரி.. மதுரை கம்யூ., கட்சி துணை மேயர் திடீர் அதிருப்தி!!

இதைப் பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எடப்பாடியில் உள்ள அவரது தந்தை மாறியப்பனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் மாணவன் ரிஷி பிரியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் ரிஷி பிரியன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!