காலை வெறும் வயிற்றில் இத மட்டும் பண்ணிட்டாலே மலச்சிக்கல் பிரச்சினை இருந்ததையே மறந்து போய்விடலாம்!!! 

Author: Hemalatha Ramkumar
29 October 2024, 6:18 pm

சிலருக்கு காலை எழுந்ததும் மலம் கழிப்பது என்பது மிகவும் பிரச்சனை நிறைந்ததாக இருக்கும். தினம் தினம் போராடியே மலம் கழிக்க வேண்டிய  சூழ்நிலையை பலர் அனுபவித்து வருகிறார்கள். இந்த சங்கடமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கான வழிகளை தேடிக்கொண்டிருப்பவர்களுக்காக இந்த பதிவு. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு சில பானங்களை தினமும் குடித்து வர உங்களுடைய மலச்சிக்கல் பிரச்சனை நிச்சயமாக குணமாகும். அப்படி நீங்கள் பருக வேண்டிய பானங்களை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ளலாம். 

திரிபலா பானம் 

திரிபலா என்ற இந்த ஆயுர்வேத சிகிச்சை குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மட்டும் அல்லாமல் நம் உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு மருந்தாக அமைகிறது. இதற்கு ஒரு டம்ளர் தண்ணீரில் 2 டீஸ்பூன் திரிபலா பொடியை கலந்து காலை வெறும் வயிற்றில் பருகுங்கள். இதில் மலமிளக்கும் பண்புகள் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது. 

ஆப்பிள் ஜூஸ் 

ஆப்பிள் ஜூஸில் முழுக்க முழுக்க உணவு நார்ச்சத்து இருப்பதன் காரணத்தினால் இது குடலில் உள்ள கழிவுகளை எளிதாக வெளியேற்றுவதற்கு உதவுகிறது. நாள் முழுவதும் அடிக்கடி ஆப்பிள் ஜூஸ் பருகுவதன் மூலமாக மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

புதினா தண்ணீர்

வெதுவெதுப்பான தண்ணீரில் ஃபிரஷான புதினா இலைகளை சேர்த்து குடிப்பது உங்களுடைய செரிமான அமைப்பிற்கு அமைதியை ஊட்டும் விளைவை அளிக்கிறது. இது தசைகளை ஆற்றி மலச்சிக்கல் வயிற்று உப்புசம், வாயு தொல்லை மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளை போக்குகிறது. 

இதையும் படிக்கலாமே: 

அடர்த்தியான தலைமுடிக்கு காஸ்ட்லியான ப்ராடக்டுகளை தான் பயன்படுத்தனும்னு இல்ல… அந்த பொருள் உங்க வீட்டிலேயே கூட மறைந்து இருக்கலாம்!!!

தண்ணீருடன் பேக்கிங் சோடா 

பேக்கிங் சோடா இயற்கையில் காரத்தன்மை கொண்டது. இது வயிற்றில் உள்ள pH அளவுகளை சமநிலையாக்கி வயிற்றில் குறைந்த அமில சூழலை உருவாக்குகிறது. இது வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு குட்பை சொல்ல உதவுகிறது. 

வெல்லம் தண்ணீர் 

இந்த இயற்கை இனிப்பான் நாள்பட்ட மற்றும் அவ்வப்போது ஏற்படும் மலச்சிக்கல் ஆகிய இரண்டிற்கும் மருந்தாக அமைகிறது. வெல்லத்தில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால் இது மலத்தை மென்மையாக்கி மலம் தடையில்லாமல் வெளியேறுவதை உறுதி செய்கிறது. இதற்கு வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லம் கலந்து தூங்குவதற்கு முன்பு பருகுங்கள். 

எலுமிச்சை தண்ணீர் 

ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடிப்பது உங்களுடைய செரிமானத்திற்கு தேவையான வைட்டமின் C சத்தை அளிக்கிறது. எலுமிச்சை வயிற்றில் உள்ள அமிலத்தை சமநிலை செய்து கல்லீரல் செயல்பாட்டுக்கு உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை தடுக்கப்படுகிறது. 

விளக்கெண்ணெய்

இயற்கையான மலமிளக்கும் பண்புகளை கொண்டுள்ளதால் இதனை மலச்சிக்கலுக்கு தாராளமாக நீங்கள் பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் தூங்குவதற்கு முன்பு 2 டீஸ்பூன் விளக்கெண்ணையை சாப்பிடலாம். இப்படி செய்ய காலையில் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் மலம் கழிக்கலாம். 

ஆப்பிள் சைடர் வினிகர் 

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து குடிப்பது உங்களுடைய செரிமானத்தை தூண்டி வயிற்றில் உள்ள அமிலத்தை சமநிலை செய்யும். இதில் உள்ள ப்ரோபயாட்டிக் பண்புகள் குடல் ஆரோக்கியத்திற்கு ஆதரவு அளித்து மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்கிறது. 

வெள்ளரிக்காய் தண்ணீர்

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட வெள்ளரிக்காயை சேர்த்து  அதிகாலையில் பருகுங்கள். இது உங்களுக்கு தேவையான நீர்ச்சத்தை அளிப்பது மட்டுமல்லாமல் இதில் உள்ள வீக்க எதிர்ப்பு பண்புகள் வயிற்று உப்புசத்தை போக்கி செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!