நீங்க மன அழுத்தத்துல இருக்கும் போது உங்க முகத்துல இந்த அறிகுறிகள் கட்டாயம் வரும்!!!

Author: Hemalatha Ramkumar
6 January 2025, 7:12 pm

வேலையில் ஏற்படும் அழுத்தங்கள், உறவுகள் மற்றும் பொருளாதாரம் போன்ற பல்வேறு வாழ்க்கை முறை நிலைகளினால் தூண்டப்படும் மன அழுத்தம் நம்முடைய உடல் மற்றும் மனநலனில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக நாள்பட்ட மன அழுத்தம் என்பது பதட்டம், மனச்சோர்வு மற்றும் மனநிலை சம்பந்தப்பட்ட கோளாறுகளை ஏற்படுத்தி அதனால் உயர் ரத்த அழுத்தம், டயாபடீஸ் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. மேலும் மன அழுத்தமானது நம்முடைய தூக்கத்தை பாதித்து நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவிழக்க செய்து, செரிமானத்தை மெதுவாக்குகிறது.

மன அழுத்தத்தால் ஏற்படும் விளைவு என்பது நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் நமது தோற்றத்தையும் பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக நம்முடைய முகத்தில் மன அழுத்தத்திற்கான அறிகுறிகளை வெளிப்படையாக காணலாம். அந்த வகையில் மன அழுத்தம் இருக்கும் பொழுது நம்முடைய முகத்தில் அது எப்படி வெளிப்படுத்தப்படும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

முகம் குண்டாக தெரிவது

நாள்பட்ட மன அழுத்தத்தால் தண்ணீர் தக்கவைக்கப்பட்டு வீக்கம் ஏற்பட்டு, முகம் வீங்கி காணப்படும். முகம் வட்ட வடிவில் காட்சியளித்து எடை அதிகரித்தது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும். கூடுதலாக மன அழுத்தம் காரணமாக விளையும் மோசமான உணவு சாப்பிடும் பழக்க வழக்கங்கள் காரணமாகவும் முகம் குண்டாக காட்சியளிக்கலாம்.

முகப்பரு 

மன அழுத்தம் காரணமாக நம்முடைய உடலில் கார்டிசால் என்ற ஹார்மோன் வெளியிடப்படுகிறது. இதனால் எண்ணெய் உற்பத்தி அதிகமாகி சரும துளைகளில் அடைப்புகள் ஏற்படுகிறது. இதன் விளைவாக முகப்பருக்கள் மற்றும் சரும வீக்கம் உண்டாகிறது. மேலும் மன அழுத்தம் என்பது சருமத்தின் இயற்கையான பாதுகாப்பு தடையை வலுவிழக்க செய்து, எளிதில் சுற்றுச்சூழல் மாசுபடுத்திகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆளாக்குகிறது.

கண்களுக்கு கீழ் வீக்கம்

கருவளையம் மற்றும் கண்களுக்கு கீழ் வீக்கம் ஏற்படுவது மன அழுத்தத்திற்கான முக்கியமான அறிகுறி. போதுமான தூக்கம் இல்லாதது, மோசமான ரத்த ஓட்டம் மற்றும் அதிக கார்டிசால் அளவுகள் திரவத்தை தக்க வைக்க செய்து வீக்கத்தையும், தோலில் நிற மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. இது உங்களுக்கு சோர்வு மற்றும் முன்கூட்டிய வயதான அறிகுறியை ஏற்படுத்தி, முகத்தை வயதானது போல காண்பிக்கும்.

இதையும் படிக்கலாமே : டெய்லி ஒரு பல் பூண்டு உங்க லைஃபையே மாற்றிவிடும்!!!

வறண்ட தோல் 

மன அழுத்தம் என்பது நம்முடைய தோலை மிக மோசமாக பாதிக்கிறது. இதன் விளைவாக தோலில் வறட்சி, பொலிவில்லாமல் இருப்பது ஆகியவை ஏற்படுகிறது. கார்ட்டிசால் என்ற மன அழுத்த ஹார்மோன் அதிகரிப்பு காரணமாக சருமத்தில் உள்ள இயற்கை ஈரப்பத பாதுகாப்பு தடை அகற்றப்பட்டு, அதனால் தோலில் வறட்சி மற்றும் எரிச்சல் உண்டாகிறது.

மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் 

மன அழுத்தம் காரணமாக முகத்தில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் வரலாம். டென்ஷன் மற்றும் பதட்டமாகியவை ஏற்படும் பொழுது தொடர்ச்சியாக நீங்கள் செய்யும் முக பாவனைகள் ஆழமான கோடுகள் மற்றும் சுருக்கங்களை உண்டாக்குகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!