இளையராஜானு ஒருத்தன் இருக்கான்.. மிஷ்கின் பேச்சால் வெடித்த சர்ச்சை!

Author: Hariharasudhan
19 January 2025, 10:56 am

இளையராஜானு ஒருத்தன் இருக்கான், அவன் எனக்கு மிகப்பெரிய போதை என இயக்குநர் மிஷ்கின் பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

சென்னை: இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில், இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பாட்டல் ராதா’. இப்படத்தில் குரு சோமசுந்தரம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது.

மேலும், இந்த விழாவில் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், மிஷ்கின், லிங்குசாமி உள்ளிட்ட பல இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து, விழா மேடையில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது, “மது அருந்துவது என்பது ஒரு நிலை. மன வருத்தம் அதிகம் உள்ளவர்கள் மது அருந்துகிறார்கள்.

Mysskin speech about Ilayaraja got viral

பிறகு, அதற்கு அடிமையாகி விடுகின்றனர். நானும் பெரும் குடிகாரன். ஆனால், எனக்கு வாழ்க்கையின் மீது நம்பிக்கை உள்ளது. எனக்கு அதைவிட மிகப்பெரிய போதை இருக்கிறது, அது சினிமா. இயக்குநர் குரோசாவா என்னுடைய மிகப்பெரிய போதை.

இதையும் படிங்க: இன்னும் 13 அமாவாசைகள் தான்.. திமுகவுக்கு கெடு விதித்த எடப்பாடி பழனிசாமி!

அதைவிட இளையராஜானு ஒருத்தன் இருக்கான், அவன் மிகப்பெரிய போதை எனக்கு. பலரையும் குடிகாரனாக மாத்தியது அவர்தான் னு வச்சிக்கலாம்” என பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு மிஷ்கின் பேசியது நெட்டிசன்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?