தாறுமாறான வசூல் வேட்டையில் ‘குடும்பஸ்தன்’…வெற்றிப்பாதையில் படக்குழு.!

Author: Selvan
17 February 2025, 2:04 pm

வெற்றிகரமாக 25 வது நாளில் ‘குடும்பஸ்தன்’

தமிழ் சினிமாவில் சில வருடமாக குறைத்த பட்ஜெட்களில் நல்ல கதையை மையப்படுத்தி உருவாகி வரும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது,அந்த வரிசையில் கடந்த மாதம் நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளிவந்த குடும்பஸ்தன் திரைப்படத்தை மக்கள் திரையில் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படியுங்க: ஆக்ஷன் கிங் அர்ஜுன் பட டைட்டிலில் SK 23…மிரட்டலான லுக்கில் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ.!

இதனால் இத்திரைப்படம் 25 வது நாளில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது,நடிகர் மணிகண்டன் ஏற்கனவே ஜெய்பீம்,குட் நைட்,லவ்வர் போன்ற திரைப்படங்களில் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர்,அதே போல குடும்பஸ்தன் படத்திலும் நம்மோடு பயணிக்கும் ஒருவரை போல நடித்து அசத்தியிருப்பார்.

ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவன்,அன்றாட வாழ்க்கையில் முன்னேற என்னென்ன கஷ்டங்களை சந்திக்கிறான்,குடும்பத்தை எப்படி சமாளிக்கிறான் என்பதை நகைச்சுவையோடு,மக்களுக்கு எடுத்து சொன்ன விதம் மிக அருமை,வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம்,ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று 25 கோடி வசூலை கடந்து,25வது நாளில் வெற்றிகரமாக பயணித்து வருகிறது.இதனால் படக்குழு மிகுந்த சந்தோஷத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Ravi Mohan married for the second time? Video goes viral on the internet! 2வது திருமணம் செய்த ரவி மோகன் ? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!