காவல் நிலையத்தில் ஆபாச வீடியோ காட்டிய எஸ்ஐ.. யாருக்கு தெரியுமா? ஆடிப்போன காவல்துறை!

Author: Hariharasudhan
22 March 2025, 3:49 pm

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் எஸ்ஐ, பெண் சப் இன்ஸ்பெக்டருக்கு ஆபாச வீடியோ காண்பித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தின், மதுரா மாவட்டத்தில் மகோரா காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு சப் இன்ஸ்பெக்டராக மோகித் ராணா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், அதே காவல் நிலையத்தில் பெண் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

அதாவது, சம்பவம் நடந்ததாக கூறப்படும் நாளில் இருவரும் பணியில் இருந்த நிலையில், மோகித் ராணா மது போதையில் இருந்துள்ளார். அப்போது, அந்தப் பெண் சப் இன்ஸ்பெக்டரின் அறைக்குச் சென்று அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளார். பின்னர், இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சப் இன்ஸ்பெக்டர் உயர் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

SI sexual assault

இதனையடுத்து, இது குறித்து விசாரணை நடத்தியதில், மோகித் ராணா மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய வருவதற்கு முன்பாக ஆபாசப் படங்களைக் காண்பித்து, அதை பார்க்குமாறு அந்த சப் இன்ஸ்பெக்டர் கட்டாயப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் சப் இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கனிமொழி கேள்விக்கு திமுக பதில் கூற முடியுமா? தடம் மாறிய தமிழிசை!

இந்த நிலையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், தன் செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்களை மோகித் அழித்ததோடு, தன்னுடைய ஸ்மார்ட் வாட்சையும் கழட்டி வெளியே வீசியுள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும், அவரை போலீசார் தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?