தென்னிந்தியா பெஸ்ட்..அங்கே வாழ ஆசை..மும்பையில் சலசலப்பை ஏற்படுத்திய பாலிவுட் நடிகர்.!

Author: Selvan
25 March 2025, 8:16 pm

பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்,தென்னிந்திய சினிமாவை பாராட்டி,பாலிவுட் அந்தத் தரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், தென்னிந்தியாவில் குடியேறவும் விருப்பம் தெரிவித்துள்ள அவர்,தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் மிகவும் உற்சாகமாகவும்,உறுதியான அணுகுமுறையுடன் படங்களை உருவாக்குகிறார்கள் எனக் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க: ஐபிஎல் ரசிகர்களே உஷார்.!நூதன முறையில் பணத்தை திருடும் மர்ம கும்பல்.!

மும்பையில் நடைபெற்ற ‘ஜாட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சன்னி தியோல்,பாலிவுட்டை விட தென்னிந்திய திரையுலகம் மிகுந்த பிரம்மாண்டத்துடன் வேலை செய்வதாகவும்,அவர்களிடம் இருந்து படங்களை எப்படி ஆர்வத்துடனும், உணர்வுப்பூர்வமாகவும் உருவாக்குவது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் “இந்தி சினிமா தயாரிப்பாளர்கள் தென்னிந்திய தயாரிப்பாளர்களிடம் இருந்து காதலுடன்,அன்புடன் படங்களை உருவாக்கும் கலையை கற்றுக்கொள்ள வேண்டும்.தென்னிந்திய படங்களின் சிறப்புமிக்க தயாரிப்பு முறைகளால்,அவர்களுடன் பணியாற்றுவதில் எனக்கு மகிழ்ச்சி,எதிர்காலத்தில் நிறைய தென்னிந்திய படங்களில் நடிக்கத் தயாராக இருக்கிறேன், நான் தென்னிந்தியாவில் குடியேற விரும்புகிறேன்” எனக் கூறினார்.

சன்னி தியோலின் இந்த கருத்துக்கள் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சமீபத்தில், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் தென்னிந்திய படங்களை பாராட்டி பாலிவுட் சினிமாவில் இருந்து விலகுவதாக கூறிய நிலையில் தற்போது சன்னி தியோலும் அதே மாதிரி பேசி இருப்பது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?