13 வயது மாணவனை கடத்தி உல்லாசம்… கர்ப்பமான ஆசிரியை : கோர்ட் அதிரடி உத்தரவு!
Author: Udayachandran RadhaKrishnan16 May 2025, 5:39 pm
காலம் கலிகாலம் என்பது ஒவ்வொரு நாளும் நிரூபித்துக்கொண்டே உள்ளது. பாடம் கற்பிக்க வரும் மாணவர்கள் மீது ஆசிரியைகள் தவறான எண்ணங்களை சிதைக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம்தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில், 23 வயதான டியூசன் ஆசிரியை, 13 வயது மாணவனை கடத்தி சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனால் கர்ப்பமடைந்த ஆசிரியைக்கு கோர்ட் கண்டனம் தெரிவித்து, கருக்கலைப்பு செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த கருவின் டிஎன்ஏவை பரிசோதனை செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
அதாவது, சம்மந்தப்பட்ட மாணவருக்கு டியூசன் எடுக்க அவரது வீட்டுக்கே ன்றுள்ளார் ஆசிரியை. பின்னர் தனது வீட்டில் டியூசன் சொல்லித் தருவதாக மாணவனை வரவழைத்துள்ளார்.
அப்படி வந்த போது தான், மாணவர் மீது காதல் வயப்பட்ட ஆசிரியை, எப்படியாவது மாணவனை கடத்தி சென்றுவிட வேண்டும் என குறியாக இருந்துள்ளார்.
கிட்டத்தட்ட இரண்டு வருடமாக மாணவனுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்த ஆசிரியை, கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி மாணவனை கடத்தி, ஜெய்ப்பூர், வதோதரா, அகமதாபாத், டெல்லி, பிருந்தாவனம் என நகரங்களை வலம் வந்த அவர், ஏப்ரல் 30ஆம் தேதி அகமதாபாத் நோக்கி பேருந்தில் வந்த போது போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
விசாரணையில், மாணவனை 2 வருடமாக காதலித்தாகவும், கடந்த ஒரு வருடமாக உடலுறவில் இருந்ததாகவும் கூறியுள்ளார். மாணவனுக்கு புதிய உடை, சிம் கார்டு, காலணி என அனைத்தையும் வாங்கி கொடுத்து, திட்டம் போட்டு வீட்டை விட்டு ஓடிச்சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவருடமாக உடலுறவில் இருந்ததால், கருவுற்றதாகவும் கூறியுள்ளார். ஆசிரியை மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், கோர்ட் கருவை கலைக்கவும், டிஎன்ஏ பரிசோதனைக்காக பாதுகாப்பாக கரு வைக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
