தமிழகத்தில் எங்கெல்லாம் ரெட் அலர்ட்? விடுமுறைக்காக வெளிய போற பிளான் இருக்கா? வானிலை எச்சரிக்கை!
Author: Udayachandran RadhaKrishnan24 May 2025, 4:44 pm
மே மாதம் அக்னி வெயிலி கொளுத்தும் என எதிர்பார்த்த மக்களுக்கு இன்ப அதிர்ச்சிதான் காத்திருந்தது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதையும் படியுங்க: திருமண நிகழ்வுக்கு வந்த 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர்.. கொடூர சம்பவம்!
இந்த நிலையில் வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா இன்று செய்தியாளர்களை சந்தித்து வானிலை குறித்து முக்கிய விஷயங்களை கூறியுள்ளார்.
அதில், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக கூறிய அவர், மத்திய கிழக்கு அரபி கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இதனால் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

குமரி, நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்களில் மிக கனமழை நாளை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே போல நீலகிரி, கோவையில் வரும் 27ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது இந்தாண்டு மே வரையிலான காலத்தில் மட்டும் 95 சதவீதம் கூடுதலாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக கூறியுள்ளார்.