ஹார்ட் டிஸ்க் கிடைச்சிருச்சு போல- தமிழகமே எதிர்பார்த்த ரஜினி படத்தின் ஓடிடி வெளியீட்டிற்கான அறிவிப்பு?

Author: Prasad
31 May 2025, 1:28 pm

கேமியோவாக நடித்த ரஜினி

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் “லால் சலாம்”. இதில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். 

மத நல்லிணக்கத்தை மையமாக வைத்து உருவான ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம் இது. இத்திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இத்திரைப்படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை. இதனிடையே ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இத்திரைப்படத்தின் சில Footages அடங்கிய ஹார்ட் டிஸ்க் தொலைந்துபோனதாக தெரிவித்தார். 

இத்திரைப்படம் படுதோல்வியடைந்த நிலையில் இத்திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட பல முயற்சிகளை மேற்கொண்டனர் படக்குழுவினர். அந்த வகையில் நெட்பிலிக்ஸ் நிறுவனத்தை படக்குழுவினர் அணுகியபோது, “தொலைந்துப்போன ஹார்ட் டிஸ்க்கை கண்டுபிடித்து அதில் உள்ள காட்சிகளை இதில் சேர்த்தால்தான் நாங்கள் இத்திரைப்படத்தை வாங்குவோம்” என கண்டிஷன் போட்டதாக செய்திகள் வெளிவந்தன. 

திடீரென வெளியான அறிவிப்பு

இவ்வாறு பல மாதங்கள் எந்த ஓடிடி தளத்திற்கும் விநியோகமாகாமல் இருந்த “லால் சலாம்” திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதாவது வருகிற பக்ரித் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 6 ஆம் தேதி  சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் “லால் சலாம்” திரைப்படம் வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் நெக்ஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் “ஹார்ட் டிஸ்க்” கிடைத்துவிட்டதா? என்று கம்மண்ட் செய்து வருகின்றனர்.

  • karnataka court said that kamal haasan should apologize for his speech about kannada நீங்கள் என்ன மொழி ஆய்வாளரா?- கமல்ஹாசனிடம் ஆதாரம் கேட்டு மன்னிப்புக்கு கெடு விதித்த நீதிமன்றம்!
  • Leave a Reply