அஜித்குமார் வழக்கில் திடீர் திருப்பம்? நிகிதா மீது மோசடி புகார்! தூசிதட்டப்பட்ட பழைய File…

Author: Prasad
2 July 2025, 4:14 pm

திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது காரை பார்க் செய்ய சொல்லி கேட்டிருக்கிறார். கோயிலுக்குள் சென்று தரிசித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது காருக்குள் இருந்த 10 பவுன் நகைகள் காணவில்லை என்றும் இந்த நகை திருட்டு தொடர்பாக அஜித்குமார் மீது சந்தேகம் இருப்பதாகவும் அப்பெண் போலீஸில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மடப்புரம் காளியம்மன் கோவில் தற்காலிக காவலாளி அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து வந்த காவல் துறையினர் கொடூரமாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். 

a turning point in ajithkumar custody death case

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட 5 போலீஸார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில் அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதாவின் வீடியோவும் வெளியானது. இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு நிகிதாவின் மீது ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

a turning point in ajithkumar custody death case

அதாவது 2011 ஆம் ஆண்டு வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்துள்ள புகார் ஒன்றில் நிகிதா மீது FIR பதியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது அஜித்குமாரின் வழக்கில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வருகிறது. 

  • actor kpy bala built house for two poor families with the salary amount கர்ண பிரபுவாக மாறிய KPY பாலா? ரீல் ஹீரோ To ரியல் ஹீரோவாக மாறிய சம்பவம்!
  • Leave a Reply