டீக்கடையில் டீ போட்டுக்கொடுத்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ? என்ன மனுஷன்யா!
Author: Prasad23 July 2025, 12:43 pm
வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்கு 9 மாதங்களுக்கு முன்பே தனது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்.
தமிழகத்தின் பல ஊர்களுக்கு தற்போது “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முதற்கட்ட சுற்றுப்பயணம் முடிவடையவுள்ள நிலையில் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்திற்கு தற்போது தயாராகி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார். இதனை தொடர்ந்து அதற்கான முன்னேற்பாடுகளில் அதிமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் இழுப்பூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஒரு பெண் சர்க்கரை கம்மியாக டீ போட்டுக்கொடுக்கச்சொல்லி கேட்க, அதற்கு விஜயபாஸ்கர் அங்கிருந்த டீக்கடையில் சிரித்துக்கொண்டே டீ போட்டுக்கொடுத்தார். விஜயபாஸ்கரின் இச்செயல் பலரின் கவனத்தை குவித்து வருகிறது.
