ரொம்பவும் Average ஆன கதை? சோகத்தை ஏற்படுத்திய கூலி படத்தின் முதல் விமர்சனம்!

Author: Prasad
11 August 2025, 5:23 pm

அரங்கம் அதிர வெளியாகப்போகும் கூலி!

வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான “கூலி” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இவ்வாறு மாஸ் காம்போவில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இத்திரைப்படம் வெளியாக இன்னும் மூன்றே நாட்களே இருப்பதால் இத்திரைப்படத்தை கொண்டாட்டத்துடன் வரவேற்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். 

இத்திரைப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே இவ்வாரத்திற்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. இவ்வாறு அரங்கம் அதிர வெளிவரப்போகும் “கூலி” திரைப்படத்தை குறித்த முதல் விமர்சனம் ஒன்று வெளிவந்துள்ளது. 

Coolie movie story and screenplay is average said by famous film critic 

Average ஆன கதை!

லண்டனில் வாழும் வெளிநாட்டு சென்சார் போர்டு உறுப்பினரும் சினிமா விமர்சகருமான உமைர் சந்து “கூலி” திரைப்படத்தின் முதல் விமர்சனத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர், “கூலி ஒரு One Man Show திரைப்படம். ரஜினிகாந்த் Steal the show. அவரது நடிப்பு Power Packed ஆக இருந்தது. மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஆனால் கதையும் திரைக்கதையும் Average. கிளைமேக்ஸும் கடைசி இருபது நிமிடங்களும் படத்தின் USP” என கூறியுள்ளார். மேலும் இத்திரைப்படத்திற்கு 5க்கு 3 ஸ்டார்கள் கொடுத்துள்ளார். 

படத்தை பற்றி இவர் நல்ல விதமாக கூறியிருந்தாலும் படத்தின் கதையும் திரைக்கதையும் Average என கூறியிருப்பது ரசிகர்களை சற்று சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!