50 ஆண்டுகளில் 170 திரைப்படங்கள்! ரஜினிக்கு வளைத்து வளைத்து வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்!

Author: Prasad
13 August 2025, 4:18 pm

நடத்துனர் டூ சூப்பர் ஸ்டார்

கர்நாடகாவில் பேருந்து நடத்துனராக தனது கெரியரை தொடங்கிய ரஜினிகாந்த், சினிமாவில் எப்படியாவது பெரிய நடிகராக ஆகவேண்டும் என்று சென்னைக்கு ஓடி வந்தார். சென்னையில் சினிமா பட்டறையில் நடிப்பு பயின்று பாலச்சந்தரின் “அபூர்வ ராகங்கள்” என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 

இத்திரைப்படம் வெளியான ஆண்டு 1975 ஆகஸ்ட் 15. தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து வந்த ரஜினிகாந்த் தனது தனித்துவமான நடிப்பாலும் கவர்ந்திழுக்கும் ஸ்டைலாலும் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தார். ஒரு கட்டத்தில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய ரஜினிகாந்த், தமிழ் சினிமா ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். அவரது கடும் உழைப்பு அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சேர்த்தது. 

Cinema actors and politicians wishes rajinikanth for his 50th year in tamil cinema

170 திரைப்படங்கள்!

இந்த 50 ஆண்டுகளில் ரஜினிகாந்த் 170 திரைப்படங்களில் நடித்துள்ளார். நாளை வெளியாகவுள்ள “கூலி” திரைப்படம் அவரது 171 ஆவது திரைப்படமாகும். அந்த வகையில் சினிமா கெரியரில் தனது 50 ஆவது ஆண்டை நிறைவு செய்கிறார் ரஜினிகாந்த். 

இந்த நிலையில் ரஜினிகாந்திற்கு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை பலரும் வாழ்த்துச் சொல்லி வருகின்றனர். கவிப்பேரரசு வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் “50 ஆண்டுகள் ஒரே துறையில் உச்சத்தில் இருப்பது அபூர்வம். ரஜினி நீங்கள் ஓர் அபூர்வ ராகம்” என தொடங்கும் ஒரு நீண்ட கவிதையை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். 

இதனை தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில், “திரைத்துறையில் வெற்றிகரமாக 50 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கும் அன்புக்குரிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது மனதார வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். 

மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “திரைத்துறையில் 50 ஆண்டுகால மகத்தான சாதனையை நிறைவு செய்த நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐயாவை வாழ்த்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து “கூலி” படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ், தனது எக்ஸ் பக்கத்தில், “எனது பயணத்தில் கூலி திரைப்படம் மிகவும் ஸ்பெஷலான திரைப்படமாக இருக்கும். இந்த வாய்ப்பிற்கும் படத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நாங்கள் பகிர்ந்துகொண்ட உரையாடல்களுக்கும் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இவை நான் எப்போதும் மறக்க முடியாத தருணங்கள்” என கூறியுள்ளார். 

மேலும் நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில், “தனது திறமையால் சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு கடக்கும் எனது நண்பரே. சினிமாவில் இன்று 50 வருடங்களை நிறைவு செய்கிறீர்கள். நமது சூப்பர் ஸ்டாரை நான் பாசத்துடனும் பாராட்டுடனும் கொண்டாடுகிறேன். மேலும் இந்த பொன் விழாவில் கூலி உலகளாவிய வெற்றிபெறும் என வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து ஆமிர்கான் உள்ளிட்ட பல பிரபலங்களும் ரஜினிகாந்துக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!