லட்சுமி விலாஸ் வங்கியை அடுத்து இந்த வங்கிக்கும் தடை..! ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு..!

18 November 2020, 1:59 pm
RBI_UpdateNews360
Quick Share

மகாராஷ்டிராவைச் சேர்ந்த மந்தா நகர்ப்புற கூட்டுறவு வங்கியிலிருந்து ஆறு மாதங்களுக்கு பணம் எடுப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்தது.

2020 நவம்பர் 17’ஆம் தேதி வர்த்தகம் நிறைவடைந்ததிலிருந்து மகாராஷ்டிராவின் மந்தா மாவட்ட ஜல்னாவின் மந்தா நகர கூட்டுறவு வங்கிக்கு சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் முன் ஒப்புதல் இல்லாமல், எந்தவொரு தொகையையும் வழங்கவோ அல்லது புதுப்பிக்கவோ, எந்தவொரு முதலீட்டையும் செய்யவோ, நிதி கடன் வாங்குதல் மற்றும் புதிய வைப்புகளை ஏற்றுக்கொள்வது உட்பட எந்தவொரு பொறுப்பையும் வங்கி செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

“குறிப்பாக, அனைத்து சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கு அல்லது ஒரு வைப்புத்தொகையாளரின் வேறு எந்தக் கணக்கிலும் மொத்த நிலுவைத் தொகை திரும்பப் பெற அனுமதிக்கப்படாது” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2020 நவம்பர் 17’ஆம் தேதி வணிகத்தின் முடிவில் இருந்து ஆறு மாத காலத்திற்கு இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும். மேலும் அவை மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படும்.

ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவுகள் வங்கி உரிமத்தை ரத்து செய்வதாக கருதக்கூடாது என்று அது மேலும் கூறியுள்ளது. வங்கி அதன் நிதி நிலை மேம்படும் வரை கட்டுப்பாடுகளுடன் வங்கி வணிகத்தை தொடரும் என ரிசர்வ் வங்கி கூறியதுடன், சூழ்நிலைகளைப் பொறுத்து கட்டுப்பாடுகளில் மாற்றங்களை பரிசீலிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

ஒழுங்குமுறை இணக்கத்தில் உள்ள குறைபாடுகளுக்காக பெங்களூரைச் சேர்ந்த சுஷ்ருதி சஹார்தா சஹாகரா வங்கி நியாமிதாவுக்கு ரூ 20 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கர்நாடகாவின் விஜயபுராவில் உள்ள டெக்கான் நகர்ப்புற கூட்டுறவு வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ 1 லட்சம் அபராதம் விதித்தது.

முன்னதாக நேற்று மத்திய அரசு லட்சுமி விலாஸ் வங்கிக்கு 30 நாள் தடை விதித்தது. பணத்தை திரும்பப் பெறுவதை ஒரு நபருக்கு ரூ 25,000 எனக் கட்டுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Views: - 33

0

0

1 thought on “லட்சுமி விலாஸ் வங்கியை அடுத்து இந்த வங்கிக்கும் தடை..! ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு..!

Comments are closed.