AIR BUS நிறுவனத்திற்கு நேர்ந்த சோகம்..!!

15 February 2020, 8:49 am
Air Bus - updatenews360
Quick Share

AIR BUS நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு 1.36 பில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

AIR BUS நிறுவனம் ஒரு விமானத் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ஈ.ஏ.டி.எஸ் (EADS) எனும் ஐரோப்பிய நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். நிறுவனத்தின் தலைமையகம் பிரான்சு நாட்டின் துலூஸ் நகரின் அருகில் அமைந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து AIR BUS நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குய்லூம் ஃபாரி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும் போது, 2019ம் ஆண்டு மிகப் பெரும் சாதனையை தங்கள் நிறுவனம் படைத்ததாக தெரிவித்ததாக கூறிய அவர், கூடுதல் மேம்பாட்டுச் செலவுகள் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணையைத் தீர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு அதிக அளவில் அபராதம் கட்டவேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் அபராதத் தொகையாக 3.6 பில்லியன் யூரோக்கள் விதிக்கப்பட்டால் கடந்த ஆண்டு மட்டும் 1.36 பில்லியன் இழப்பை AIR BUS நிறுவனம் சந்தித்தாக குறிப்பிட்டுள்ளார்.