சரிவை நோக்கி பேங்க் ஆஃப் பரோடா.! ரூ.864 கோடி இழந்தது!!
11 August 2020, 12:44 pmநடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொதுத்துறையை சேர்ந்த பேங்க் ஆஃப் பரோடா இழப்பை சந்தித்துள்ளது.
வாராக் கடன்களுக்க ஒதுக்கீடு அதிகரித்ததையடுத்து வங்கிக்க நடப்பு நிதியாண்டு ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் தனிப்பட்ட முறையில் ரூ.864 கோடி அளவுக்கு நிகர இழப்பு ஏற்பட்டுள்ளது என பேங்க் ஆஃப் பரோடா தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டின் போது இதே காலக்கட்டத்தில் ரூ.710 கோடி நிகர லாபத்தை பதிவு செய்த பேங்க் ஆஃப் பரோடா ஏப்ரல் ஜுன் காலாண்டில் வட்டி வருவாய் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.18,944 கோடியில் இருந்து 2.38 சதவீதம் குறைந்து ரூ.18,494 கோடியானது.
வாராக்கடன் உள்ளிட்ட இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கான மொத்த ஒதுக்கீடு ரூ.3,285 கோடியில் இருந்து 71.32 சதவீதம் அகதிகரித்துள்ளது. ஜுன் 30ஆம் தேதி நிலவரப்படி மொத்த வாராக் கடன் விகிதம் 10.28 சதவீதத்தில் இருந்து 9.39 சதவீதமாக குறைந்துள்ளது.
நிகர வாராக்கடன் விகிதமும் 3.95 சதவீதத்தில் இருந்து 2.83 சதவீதமாக சரிந்துள்ளதாக பேங்க் ஆஃப் பரோடா பங்குச்சந்தையிடம் தெரிவித்துள்ளது.