3 மடங்கு லாபத்தை ஈட்டிய பேங்க் ஆஃப் இந்தியா.!!

4 August 2020, 11:23 am
Bank Of India - Updatenews360
Quick Share

பொதுத் துறையை சேர்ந்த பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் நிகழாண்டு நிதியாண்டி முதல் காலாண்டில் நிக்ர லாபம் 3 மடங்கு அதிகரித்துள்ளது.

பொதுத் துறை வங்கியா பேங்க் ஆஃப் இந்தியா நடப்பு நிதியாண்டில் 3 மடங்கு லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் ஜுன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் ரூ.11,941.52 கோடியை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த காலாண்டில் ஈட்டிய வருவாயை கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் ஈட்டிய வருமானத்துடன் ஒப்பிடுகையில் இது அதிகம். 2019-20 நிதியாண்டின் போது பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனம் ஈட்டிய வருமானம் ரூ.242.60 கோடி மட்டுமே.

இதனால் 3 மடங்கு நிகர லாபம் உயர்ந்து ரூ.843.60 கோடியை எட்டியது. வாராக் கடன் அழுத்தங்கள் கொடுக்காததால் இந்த வருமானம் ஈட்டியுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. வாராக்கடனை ஒப்பிடும் போது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 16.50 சதவீதத்தில் இருந்து 13.91 சதவீதமாக குறைந்துள்ளது.

இதே போல வாராக்கடன் விகிதம் 5.79 சதவீதத்தில் இருந்து 3.58 சதவீதமாக சரிந்ததுள்ளது. வாராக்கடன் இடர்பாட்டை எதிர்கொள்வதற்கான ஒதுக்கீடு ரூ.1,873.28 கோடியில் இருந்து கணிசமாக குறைந்து ரூ.766.62 கோடியாக உள்ளது என வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Views: - 51

0

0