ஏற்றுமதியை அதிகரிக்க ஈ-காமர்ஸ் கட்டுப்பாடுகளில் தளர்வு..? மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க திட்டம்..!

27 January 2021, 11:52 am
E_Commerce_UpdateNews360
Quick Share

நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் ஈ-காமர்ஸ் பிரிவின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், ஈ-காமர்ஸ் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான மொத்த அனுமதி வசதியை விரிவாக்குவது போன்ற நடவடிக்கைகளை அடுத்த வாரம் பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் ஈ-காமர்ஸ் துறையில் வர்த்தகம் பல மடங்கு அதிகரித்து இருப்பதால், இந்த தளத்தின் மூலம் கணிசமான அளவு பொருட்கள் இந்தியாவுக்கு வெளியே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் கட்டுப்பாட்டுக்கும் வசதிக்கும் இடையில் சமநிலையைக் கண்டறிய வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர்கள் கூறினர்.

தற்போது, இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஒவ்வொரு தொகுப்பிற்கும் தனிப்பட்ட அல்லது தனி அனுமதி ஆவணங்களை இந்திய சுங்கத் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். இது வர்த்தகர்கள் ஈ-காமர்ஸ் மூலம் வணிகத்தை நடத்துவதற்கான செலவை அதிகரிக்கிறது.

“இந்தியாவில் ஈ-காமர்ஸ் துறையின் வளர்ச்சியை ஆதரிக்கும் நோக்கத்துடன், ஈ-காமர்ஸ் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு உள்ள கட்டுப்பாடுகளில் திருத்தம் செய்வது அவசியமாகிறது. கூடுதலாக, ஈ-காமர்ஸ் ஏற்றுமதியை எளிமைப்படுத்தப்பட்ட செயல்முறை மூலம் ஊக்குவிக்க முடியும்.” என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.

2021-22’க்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார்.

ஏற்றுமதியாளர்களின் கூற்றுப்படி, இந்தத் துறைக்கான செயல்முறைகளை எளிதாக்குவது நாட்டின் வெளிச்செல்லும் ஏற்றுமதிகளை அதிகரிக்க மேலும் உதவும்.

“மொத்தமாக அனுமதிக்கும் வசதியை விரிவாக்குவது நல்ல யோசனையாகும். உலகளவில் இந்த வசதி உள்ளது. இது பரிவர்த்தனை செலவைக் குறைக்க உதவும். இது அனுமதிக்கப்பட்டால், அது ஈ-காமர்ஸ் வர்த்தகத்திற்கு பெரிதும் பயனளிக்கும்.’ என்று இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு இயக்குநர் ஜெனரல் அஜய் சஹாய் கூறினார்.

ஒரு தோல் ஏற்றுமதியாளர், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டால் இந்த நடவடிக்கை ஈ-காமர்ஸ் மூலம் மூலம் ஏற்றுமதியை மேம்படுத்த உதவும் என்று கூறினார்.

Views: - 0

0

0