குஷியில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா.! நிகர லாபம் அதிகரிப்பு.!!
12 August 2020, 6:16 pmபொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிகர லாபம் அதிகரித்துள்ளது.
இது குறித்து சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மும்பை பங்குச்சந்தையிடம் அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜுன் காலாண்டில் வங்கி ஒட்டுமொத்த வருவாயாக ரூ.6,751.86 கோடியாக இருந்தது.
இந்த வருவாயை கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் ஒப்பிடுகையில் சற்று அதிகம். நிகர லாபம் ரூ.121.61 கோடியில் இருந்து 21 சதவீதம் அதிகரித்து ரூ.147.21 கோடியாக உள்ளது. தனிப்பட்ட முறையில் வங்கியின் நிகர லாபம் 14.5 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதே போல ஜுன் 30 நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதமும் 7.98 சதவீதத்தில் இருந்து 6.76 சதவீதமாக சரிந்துள்ளது. வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு ரூ.1,034.78 கோடியில் இருந்து .974.64 கோடியாக குறைந்துள்ளதால் வங்கியின் நிகர லாபம் அதிகரிக்க காரணம் என சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.