கொரோனா பாதிப்பு : பொருளாதார சீரமைப்புக்கு ஒன்றரை லட்சம் கோடியா..? கசிந்த தகவல்..!

25 March 2020, 6:44 pm
Corona2_Updatenews360
Quick Share

புதுடெல்லி : கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தற்போது ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் ஏற்பட்ட வீழ்ச்சியை எதிர்த்துப் போராடுவதற்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதார ஊக்க நிதி திட்டத்தை மத்திய அரசு ஒப்புக் கொள்ள வாய்ப்புள்ளது என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்த இரண்டு பேர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம், நிதி அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றுக்கு இடையே விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்த விவகாரம் இன்னும் விவாதத்தில் உள்ளதால் பெயர் குறிப்பிட வேண்டாம் என்று கேட்கொண்டதாக  அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர், பொருளாதார மறுமலர்ச்சி திட்டம் ரூ .2.3 லட்சம் கோடி வரை பெரியதாக இருக்கலாம். ஆனால் தொகையின் அளவு குறித்து இன்னும் விவாதத்தில் உள்ளன என்றார்.

இந்த நிதி திட்டத்தை இந்த வார இறுதிக்குள் அறிவிக்க வாய்ப்புள்ளது என்று இரண்டு பேரும் தெரிவித்ததாக கூறியுள்ளது.

Leave a Reply