நிலக்கரி இறக்குமதியில் கடும் சரிவு.!!
10 August 2020, 9:54 amஇந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடந்த ஜுலை மாதத்தில் 43.2 சதவீதம் சரிவடைந்துள்ளது.
ஆலைகள் மற்றும் துறைமுகங்களில் அதிக கையிருப்பு காரணமாக நடப்பாண்டு ஜுலையில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 42 சதவீதம் குறைந்து 1.11 கோடி டன்னாக இருந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜுலை மாதத்தின் போது நிலக்கரி இறக்குமதி 1.96 கோடிடன்னாக இருந்தது.
நடப்பாண்டு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜுலை வரையிலான நான்கு மாத காலத்தில் மொத்தம் 5.72 கோடி டகன் அளவுக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் ஜுலை மாதத்துடன் இது ஒப்பிடுகையில் 35.76 சதவீதம் குறைவாகும். ஏப்ரல் – ஜுலை காலக்கட்டத்தில் கோக்கிங் கோல் இறக்குமதியானது 1.77 கோடி டன்னில் இருந்து 1.06 கோடி டன்னாக குறைந்துள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தியில் 80 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. 2020 – 21ஆம் நிதியாண்டில் 10 கோடி டன் நிலக்கரி இறக்குமதியை ஈடு செய்யும் வகையில் இந்த நிறுவனம் உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி நிலக்கரி கையிருப்பு 7.46 கோடி டன்னாக இருந்தது என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.