கொரோனா தொற்றும் இந்திய பொருளாதார பாதிப்பும் : ‘பிக்கி’ நிறுவனம் ஆய்வறிக்கை

21 March 2020, 11:55 am
FICCI-UPDATENEWS360
Quick Share

இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தாக்­கு­தல் காரணமாக, நாட்­டில் இருக்கின்ற ­நிறு­வ­னங்­களில், கடு­மை­யான பாதிப்­பு­கள் ஏற்­படக்கூடும் என்றும், பணப் புழக்­கத்­தில் ­சரிவு உண்­டா­கும் என்றும், பொருளாதார ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றது.

இந்­திய வர்த்­தக சபை­க­ளின் கூட்­ட­மைப்பு ‘பிக்கி’ மேற்­ கொண்ட ஆய்வில், இந்தியாவின், 50 % சத­விகித நிறுவனங்­களின் செயல்­பா­டு­களில் பாதிப்­பு­கள் ஏற்­படும் என்றும், 80 %
சதவிகித நிறு­வ­னங்­களின் பணப் புழக்­கத்­தில் சரிவு நிலை உருவாகும் என்றும், தெரிவித்து இருக்கின்றது.

இந்தியா பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் மந்த நிலையை சந்­தித்து வரு­வதாகவும், இந்திய பொரு­ளா­தா­ரத்­தில், மேலும் ஒரு கூடுதல் பாதிப்பு என்பது, கொரோனா வைரஸ் தொற்றின் மூலமாக உருவாக்கி இருக்கின்றது என்றும்,தேவை மற்றும் வினி­யோ­கம் போன்ற­வற்­றில் கடு­மை­யான இடையூறு­கள் உருவாகும் என்றும், தொழில் வளர்ச்சியில் ஒட்டு மொத்த சரிவுங்களை உருவாக்கும் என்றும் தனது ஆய்வறிக்கையில் ‘பிக்கி’ நிறுவனம் தெரிவித்து இருக்கினறது.

கொரோனா தொற்றின் தாக்­கு­தல் காரணமாக, ­பெரும்பாலான நிறு­வ­னங்­கள் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் இந்திய நாட்டின் ஒட்டுமொத்த அளவிலான பணப் புழக்­கத்­தில் சரிவு ஏற்­படும் என்றும் தெரிவித்து இருக்கின்றது.

இந்தியா முழுவதிலும், பொருட்­கள் மற்­றும் சேவை­க­ளின் தேவை மற்றும் வினி­யோ­கம் போன்ற­வற்­றின் மீது நேரடி தாக்­கம் ஒரு­ பு­றம் இருந்தாலும், ­பொரு­ளா­தார செயல்­பா­டு­கள் குறைந்து வரு­வ­தன் காரணமாக, பணப் புழக்­க நிலைகளிலும், பெரும் பாதிப்பை உருவாக்கும் என்றும், அதன் மூலமாக பெரும் பாதிப்புகளை எதிர்­கொண்டாக வேண்டிய நிலை உரு­வாகி இருக்கின்றது என்றும், நாடு முழுவதிலும், ஊழி­யர்­க­ளுக்­கு உண்டான ஊதியம், வட்டி, கடன்களை திரும்பச் செலுத்துவது போன்ற அனைத்­தி­லும் பெரும் பாதிப்புகள் ஏற்­பட்­டு இருக்கின்றது என்றும் ‘பிக்கி’ அமைப்பு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்து இருக்கின்றது.

மேலும், இது போன்ற சூழலில், இந்திய ரிசர்வ் வங்கி, இந்தியாவின், பொரு­ளா­தா­ர மற்­றும் தொழில் துறை நடவடிக்கையை ஆத­ரிக்கின்ற ­நோக்கத்தில், 1 % சதவிகிதம் அளவிற்கு வட்டி குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும், ‘பிக்கி’ அமைப்பு கோரிக்கை விடுத்து இருக்கின்றது.