சேமிக்க இடமில்லை.! கச்சா எண்ணெய் விலை இன்னும் கீழே கீழே.!!

28 April 2020, 12:20 pm
Crude Oil - Updatenews360
Quick Share

கச்சா எண்ணெய் தேவை குறைந்துள்ளதால் சேமிக்க இடமில்லாமல் தொடர்ந்து விலை கடும் சரிவில் உள்ளது.

ஏற்கனவே கொரோனா பாதிப்பு காரணமாக உலக நாடுகள் முழுவதும் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பினை சந்தித்து வருகின்றன. கொரோனாவை தடுக்க பல்வெறு நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தன.

இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா தன்னுடைய பன்முகத்தை காட்டியதால் ஏரளாமானோர் மடிந்தனர். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை தேவையில்லாததால் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

கடந்த 18 வருடம் இல்லாத அளவிற்கு கடும் சரிவை சந்தித்துள்ள கச்சா எண்ணெயால் தற்போது 140 எண்ணை நிறுவனங்கள் திவலாக வாய்புள்ளது. இந்த நிலை நீடித்தால் வரும் காலங்களில் 400க்கும் மேற்பட்ட எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் திவாலாக வாய்ப்புள்ளதால் பலர் வேலை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சேகரிக்கபடும் கச்சா எண்ணெயால் பல கிணறுகள் நிரம்பி விட்டது. கொரோனாவால் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது WTI ரக கச்சா எண்ணெய் 12 டாலர்களான உள்ளது. பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் விலை 19.72 டாலர்களாக உள்ளத. கடும் வீழ்ச்சியில் கச்சா எண்ணெய் உள்ளதால் பல எண்ணெய் நிறுவனங்கள் திவாலாகும் அபாய கட்டத்தில் உள்ளது.