நான்காம் காலாண்டு நிதி நிலை அறிக்கை : இந்திய நிறுவனங்கள் தாக்கல் செய்திட கூடுதல் அவகாசம் – ‘செபி’ நடவடிக்கை

20 March 2020, 10:45 am
SEBI-UPDATENEWS360
Quick Share

கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து இருக்கின்ற சூழ் நிலையில், இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான, ‘செபி’, நடப்பு நிதி ஆண்டின் நான்காம் காலாண்டு நிதி நிலை அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு, இந்திய தொழில் நிறுவனங்கள் கூடுதல் அளவாக, 45 நாட்கள் அவகாசம் வழங்கி இருக்கின்றது.

மேலும், முழு ஆண்டு அறிக்கையினை சமர்பிப்பதற்குக் கூடுதலாக, 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு இருக்கின்றது.

மேலும், வருகின்ற மார்ச் மாதம் 31-ம் தேதியன்று, நடப்பு நிதி ஆண்டின் நான்காம் காலாண்டு நிறைவடைகின்றது. மேலும், நிறுவனங்கள் அதன் காலாண்டு நிதிநிலை அறிக்கையினை அந்த காலாண்டு நிறைவடைந்து 45 தினங்களுக்குள் வெளியிட்டாக வேண்டும். அது போலவே, நடப்பு நிதி ஆண்டின் நான்காம் காலாண்டு நிதி நிலை சார்ந்த அறிக்கையினைை, மே 15-ம் தேதிக்குள் வெளியட்டாக வேண்டும்.

இந்தியாவில், தற்போது கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவுகின்றது. அதன் காரணமாக, இந்திய நிறுவனங்கள் தங்களின், நிதி நிலை அறிக்கையினை வெளியிடுவதற்கு, கூடுதலான கால அவகாசத்தை, ‘செபி’ அமைப்பு வழங்கி இருக்கின்றது. மேலும், நிறுவனங்கள் அதன் நான்காம் காலாண்டு நிதி நிலை அறிக்கையினை ஜூன் 30-ம் தேதிக்குள், சமர்ப்பித்துக்கொண்டாள் போதுமானது, என்றும் ‘செபி ‘ அமைப்பு அறிவித்து இருக்கின்றது.