அழுகும் தக்காளி பழங்கள் : கண்ணீர் விடும் விவசாயிகள்.!!

12 May 2020, 12:10 pm
Tomato Low - Updatenews360
Quick Share

தருமபுரி : தக்காளி விலை வீழ்சியடைந்துள்ளதால், விவசாய நிலங்களில் தக்காளி பழங்கள் அழுகும் நிலை உருவாகியுள்ளது.

தருமபுரி மாவட்ட மக்களின் பிரதான தொழில் விவசாயம் மட்டுமே, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, ஜருகு உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் தக்காளி, கத்திரி, முள்ளங்கி போன்ற காய்கறிகளை சாகுபடி செய்து அதனை கர்நாடகா,கேரளா சென்னை,கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மார்கெட்டுகளுக்கு அனுப்பட்டு வந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வெளி மாநிலங்களுக்கு தக்காளி ஏற்றி செல்ல அனுமதி கிடைக்காததாலும், மாவட்டத்தில் தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதாலும் இதனை கூலி ஆட்கள் வைத்து அறுவடை செய்யாமல் இருப்பதாலும் தக்காளியின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் சாகுபடி செய்த தக்காளியை அறுவடை செய்யாமல் அப்படியே விட்டுள்ளதால், தக்காளி பழங்கள் அழுகி வீணாகி வருகிறது. வறட்சியிலும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வந்து சொட்டு நீர் பாசனம் மூலம் சாகுபடி செய்த தக்காளியை சந்தைப்படுத்த முடியாமல் தோட்டங்களியே அழுகி வீணாகி வருவதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.