கொரோனாவுக்கு மத்தியிலும் 5% வளர்ச்சி கண்ட நேரடி வரி வசூல்..! மத்திய நிதியமைச்சகம் தகவல்..!

9 April 2021, 2:49 pm
Nirmala_Sitharaman_UpdateNews360
Quick Share

கடந்த 2020-21 நிதியாண்டிற்கான நேரடி வரி வசூல் குறித்த நிதி அமைச்சகத்தின் தற்காலிக புள்ளிவிவரங்கள் மூலம் நிகர வரி வசூல் 5% அதிகரித்து ரூ 9.45 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

2020-21 நிதியாண்டிற்கான ரூ .9.05 லட்சம் கோடி நேரடி வரிகளின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 104.46% நிகர நேரடி வரி வசூல் என்று நிதி அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நிகர நேரடி வரி வசூலில் தொழில் நிறுவனங்கள் செலுத்திய வரி (சிஐடி) ரூ 4.57 லட்சம் கோடியாகவும், தனிநபர் வருமான வரி (பிஐடி) உள்ளிட்ட பாதுகாப்பு பரிவர்த்தனை வரி (எஸ்.டி.டி) ரூ 4.88 லட்சம் கோடியாகவும் இருந்தது.

நிதியாண்டு 2020-21’க்கான நேரடி வரிகளின் மொத்த வசூல் (பணத்தைத் திரும்பப்பெறுவதற்கு முன்) ரூ 12.06 லட்சம் கோடியாக உள்ளது. இதில் ரிட்டர்ன்ஸ் போக மத்திய அரசுக்கு கிடைக்கும் மொத்த வருவாய் ரூ 9.45 கோடியாக உள்ளது.

மிகவும் சவாலான கொரோனா காலமாக இருந்தபோதிலும், நிதியாண்டு 20-21’க்கான அட்வான்ஸ் வரி வசூல் ரூ 4.95 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. இது கடந்த நிதியாண்டான 2019-20 உடன் ஒப்பிடும்போது ரூ 4.64 லட்சம் கோடியின் அட்வான்ஸ் வரி வசூலை விட சுமார் 6.7% வளர்ச்சியைக் காட்டுகிறது.

கடந்த நிதியாண்டில் ரூ 1.83 லட்சம் கோடி ரிட்டர்ன் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் ரூ 2.61 லட்சம் கோடி ரிட்டர்ன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட சுமார் 42.1% அதிகரிப்பைக் குறிக்கிறது.

Views: - 534

0

1