நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசு..? மூன்றாவது பொருளாதார ஊக்கத் திட்டத்தை அறிவிக்கிறது மத்திய அரசு..!

12 November 2020, 11:07 am
Nirmala_Sitharaman_UpdateNews360
Quick Share

கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிப்புக்குள்ளான பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்றாவது பொருளாதார நிதி தொகுப்பை இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளிக்கு முன்னதாக, இந்த தொகுப்பு பொருளாதாரத்திற்கு உதவ சுமார் 1.48 லட்சம் கோடி ரூபாய் ஊக்கத்தை அளிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இன்று மதியம் 12.30 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ள நிர்மலா சீதாராமனின் செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த மாதம், நிர்மலா சீதாராமன் தேவை மற்றும் மூலதன செலவினங்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அறிவித்தார். இந்நிலையில் கொரோனா வெடித்த பின்னர் இது மூன்றாவது பொருளாதாதார ஊக்கத் தொகுப்பாக இருக்கும்.

கொரோனா நெருக்கடியின் தாக்கத்திலிருந்து ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரைப் பாதுகாக்க ரூ 1.70 லட்சம் கோடி பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (பி.எம்.ஜி.கே.பி) திட்டத்தை முன்னதாக மார்ச் மாதத்தில் மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து மே மாதத்தில் ஆத்மநிர்பர் பாரத் அபியான் தொகுப்பு மூலம் ரூ 20.97 லட்சம் கோடி மதிப்பிலான ஊக்கத்தொகையை அறிவித்தது.

மேலும் நிர்மலா சீதாராமன் கடந்த மாதத்திலேயே மற்றொரு ஊக்க நிதித் தொகுப்பைக் குறிப்பிட்டார். “மற்றொரு ஊக்க நிதித் தொகுப்பு வெளியிடுவது குறித்து பரிசீலித்து வருகிறோம். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் நாங்கள் ஒன்றை அறிவித்தபோது, ​​சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்து வந்த கருத்துக்களை நிறைய பரிசீலித்த பின்னர்இது தேவை என்று உணர்ந்துள்ளோம்.” என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி பரிசாக இந்த பொருளாதார ஊக்க நிதித் தொகுப்பை மத்திய அரசு இன்று வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.

Views: - 33

0

0

1 thought on “நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசு..? மூன்றாவது பொருளாதார ஊக்கத் திட்டத்தை அறிவிக்கிறது மத்திய அரசு..!

Comments are closed.