பண மதிப்பிழப்பின் போது கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றிய நகைக்கடை நிறுவனங்கள்..! 130 கோடியை முடக்கிய அமலாக்கத்துறை..!

2 February 2021, 2:22 pm
ED_Attaches_130_Crore_Hyderabad_UpdateNews360
Quick Share

ஹைதராபாத்தைச் சேர்ந்த பல்வேறு ஆபரண விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் புரொமோட்டர்களுக்குச் சொந்தமான 130 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் கைப்பற்றியுள்ளது.

முசாதிலால் ஜெம்ஸ் அண்ட் ஜுவல்ஸ் பிரைவேட் லிமிடெட், வைஷ்ணவி புல்லியன் பிரைவேட் லிமிடெட் மற்றும் முசாதிலால் ஜுவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்க இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட சொத்துகளில், 41 அசையா சொத்துக்கள், பங்குகள் மற்றும் நகைகளில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் ரூ 83.30 கோடி மதிப்புள்ள தங்கம் ஆகியவை சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்டன.

இந்த சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ 130.57 கோடி என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த இணைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது மற்றும் 2016 பண மதிப்பிழப்பிற்குப் பிறகு, இந்த நிறுவனங்களுக்கு எதிராக தெலுங்கானா காவல்துறை பதிவு செய்த எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் அமலாக்க இயக்குநரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நவம்பர் 8, 2016 அன்று 500 மற்றும் 100 ருப்பை நோட்டுக்கள் தடை அறிவிக்கப்பட்ட உடனேயே இந்த மூன்று நிறுவனங்கள் ரூ 111 கோடி மதிப்புள்ள செல்லாத நோட்டுக்களை தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்திருப்பது விசாரணையின் போது கண்டறியப்பட்டதாக ஒரு அறிக்கையில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

“போலி ரொக்க ரசீதுகள் மற்றும் விற்பனை விலைப்பட்டியல்களை அவர்கள் திரட்டியிருந்தனர். சுமார் 6,000 கற்பனையான வாடிக்கையாளர்கள் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 8.11 மணி வரை தங்க நகைகளை வாங்குவதற்காக தங்கள் ஷோரூம்களுக்கு வருகை தந்ததைப் போல் காட்டியிருந்தனர்.

கைலாஷ் சந்த் குப்தா மற்றும் அவரது மகன்கள் (முசதிலால் ஜெம்ஸின் புரமோட்டர்கள்), தங்கள் நிறுவனங்களின் ஆடிட்டர் சஞ்சய் சர்தாவுடன் இணக்கமாக கற்பனையான வருமான ஆதாரங்களையும் பெரிய அளவிலான பண வைப்புகளையும் நியாயப்படுத்த விலைப்பட்டியல்களைத் தயாரித்தனர்.” என்று அமலாக்கத்துறை கூறியது.

“வாடிக்கையாளர்களின் கே.ஒய்.சி அல்லது பான் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதற்காக இட்டுக்கட்டப்பட்ட விலைப்பட்டியலை ரூ 2 லட்சத்திற்கு கீழே திரட்டுமாறு சர்தா அவர்களுக்கு அறிவுறுத்தினார்.” என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

ஆடிட்டர் இதை செய்து தருவதற்காக மிகப்பெரிய அளவில் கமிஷன் தொகையும் கைமாறியுள்ளதை அமலாக்கத் துறை கண்டறிந்துள்ளது.

கூறப்பட்ட பணத்தை தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்த உடனேயே, இந்த வைப்புகளில் பெரும் பகுதி தங்க விற்பனையாளர்களுக்கு தங்கம் வாங்குவதற்காக மாற்றப்பட்டது. மேலும் இது பல்வேறு நகைக்கடை, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டது.

ரூ 111 கோடி பல்வேறு நகைக்கடை, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிலிருந்து திரட்டப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. நகைக்கடைக்காரர்களில் பெரும்பாலோர் தாங்கள் பணத்தை பங்களித்ததாக ஒப்புக்கொண்டனர் என்று அது மேலும் கூறியது.

மாற்றப்பட்ட தங்கத்தை அதிக லாபத்தில் விற்பனை செய்வதன் மூலம், குப்தா குடும்பம் சுமார் 28 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது கண்டறியப்பட்டது என்று அமலாக்கத்துறை கூறியது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு செப்டம்பரில் இரண்டு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 30

0

0