இந்த வாரமே போய்ட்டு வந்துருங்க.. மாற்றமில்லாமல் தொடரும் தங்கம் விலை!

Author: Hariharasudhan
4 November 2024, 10:26 am

தீபாவளி விடுமுறையைத் தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் இருக்கிறது.

சென்னை: தொடர்ந்து தீபாவளி விடுமுறைகள் முடிந்த நிலையில், தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. அதேநேரம், சர்வதேச அளவில் மத்திய கிழக்கு பகுதிகளில் அதிகரித்த புவிசார் அரசியல் பதற்றம், உலகின் ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகளின் நாணயக் கொள்கைகள் மற்றும் அமெரிக்க தேர்தல் ஆகியவை காரணமாகவும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது.

Gold and silver

அதன்படி, இன்று (நவ.04) சென்னையில் ஒரு கிராம் தங்கம் மாற்றமில்லாமல் 7 ஆயிரத்து 370 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 58 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: நண்பனின் மனைவிக்கு காதல் வலை.. 2வது திருமணம் செய்ய வற்புறுத்தி கொலை மிரட்டல் : கட்சி பிரமுகர் லீலை!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 875 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 63 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளியும் மாற்றமில்லாமல் ஒரு கிராம் 106 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!