ரூ.520 உயர்ந்த தங்கம் விலை.. என்ன காரணம்?

Author: Hariharasudhan
26 October 2024, 10:29 am

சென்னையில் ஒரு சவரன் தங்கம் 520 ரூபாய் உயர்ந்து 58 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: சர்வதேச அளவில், மத்திய கிழக்கு பகுதிகளில் உயர்ந்த புவிசார் அரசியல் பதற்றம், ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகளின் நாணயக் கொள்கைகள் மற்றும் அமெரிக்க தேர்தல் ஆகியவற்றின் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில், நேற்றைய முன்தினம் அதிரடியாக தங்கம் விலை சரிவைக் கண்டது. ஆனால், நேற்று மீண்டும் தங்கம் விலை சற்று உயர்ந்தது.

ஆனால், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன்படி, இன்று (அக்.26) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 58 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : 10ஆம் வகுப்பில் 20 மார்க் எடுத்தால் பாஸ்.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 865 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!