தங்கம் விலை மீண்டும் உயர்வு: சவரனுக்கு ரூ.240 அதிகரித்து விற்பனை..!!

5 June 2021, 5:24 pm
Gold_Jewellery_Updatenews360
Quick Share

சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று அதிகரித்து சவரனுக்கு ரூ. 240 அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது.

Silver Theft- updatenews360

கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த அச்சம் நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வந்தது. தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.4615க்கு விற்பனையாகிறது.

சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.36920-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.39792க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி விலை 80 பைசா உயர்ந்து ரூ.76.30-க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.76,300 ஆக உள்ளது.

Views: - 531

0

0