கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை…! ஆனால், வெள்ளியோ…!

23 March 2020, 11:20 am
Gold rate 6-updatenews360
Quick Share

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக பொருளாதாரமே பெரும் சரிவை சந்தித்துள்ளன. இதனால், தங்கம் விலையும் தொடர்ந்து உயர்ந்து வந்தது. இது பொதுமக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியது. இதனிடையே, கடந்த சில தினங்களாக எப்படி ஏறுமுகமாக இருந்து வந்ததோ, அதேபோல இறங்கு முகமாகவும் காணப்பட்டது.

இருப்பினும், கடந்த சில தினங்களாக தங்கம் விலை இன்றும் கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று சரிந்துள்ளது. வார வர்த்தகத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 31,688க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5 குறைந்து ரூ. 3,961ஆக வர்த்தகமாகிறது.

ஆனால், வெள்ளி விலையோ கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிலோ வெள்ளி ரூ. 600 அதிகரித்து ரூ.40,700ஆகவும், ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் உயர்ந்து ரூ. 40.60 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply