இறங்கி இறங்கி ஏறும் தங்கம் விலை…! நம்பவே கூடாது..

19 March 2020, 4:08 pm
Gold - UpdateNews360
Quick Share

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக பொருளாதாரமே பெரும் சரிவை சந்தித்துள்ளன. இதனால், தங்கம் விலையும் தொடர்ந்து உயர்ந்து வந்தது. இது பொதுமக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியது. இதனிடையே, கடந்த சில தினங்களாக எப்படி ஏறுமுகமாக இருந்து வந்ததோ, அதேபோல இறங்கு முகமாகவும் காணப்பட்டது.

நேற்று உயர்ந்து காணப்பட்ட தங்கம் விலை இன்று காலை சரிந்து ஆறுதல் அளித்துள்ளது. ஆனால், மாலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 31,032க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 11 உயர்ந்து ரூ. 3,879ஆக வர்த்தகமாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.38.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.