‘ஷாக்க கொற… ஷாக்க கொற…’ மீண்டும் ரூ. 31,000-ஐ தாண்டியது தங்கம் விலை…!

13 February 2020, 10:40 am
Gold - UpdateNews360
Quick Share

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக தங்கத்தின் மதிப்பு மற்றும் தங்கத்தின் வர்த்தகம் திகழ்ந்து வருகிறது. மேலும், பல்வேறு சர்வதேச நிகழ்வுகள் காரணமாக, தங்கம் விலை விண்ணைத் தொட்டு வருகிறது. இதனால், தங்கம் விலை தொடர்ந்து ரூ. 30,000-க்கு அதிகமாகவே விற்பனையாகி வருகிறது. இது பொதுமக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. இந்த வார தொடக்கத்தில் இருந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை, இன்றும் உயர்ந்துள்ளது.

இன்று காலை நேர வர்த்தகப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ. 208 உயர்ந்து ரூ. 31,104-க்கு விற்பனையாகிறது. இதன்மூலம் மீண்டும் ரூ. 31,000-த்தை கடந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 26 அதிகரித்து ரூ. 3,888 ஆக விற்பனையாகிறது. இதேபோல, சென்னையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ரூ. 49,600-க்கும், ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் அதிகரித்து ரூ. 49.60-க்கு வர்த்தகமாகிறது.