கடனில் தவிக்கும் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு எளிய முறையில் தீர்வு..! திவால் சட்டத்தில் திருத்தம் செய்தது மத்திய அரசு..!
5 April 2021, 5:10 pmகடனால் தத்தளிக்கும் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) எளிதான தீர்வை வழங்குவதற்காக திவால் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. நேற்று மத்திய அரசு திவால் சட்டத்தை (ஐபிசி) திருத்துவதற்கு ஒரு அவசர சட்டத்தை அறிவித்தது. சில ஐபிசி விதிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு இடைநீக்கம் செய்யப்பட்ட சில விதிகள் 2020 மார்ச் 25 முதல் ஒரு வருடத்திற்கு புதிய திவால் நடவடிக்கைக்கு தடை விதித்திருந்தது. இது கொரோனா வைரஸ் தொற்றுநோயால் முடங்கிய பொருளாதார நடவடிக்கைகளுக்கு இடையே எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு தீர்வாக செயல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள அவசர சட்டத்தின்படி, வணிகங்களின் தனித்துவமான தன்மை மற்றும் எளிமையான கார்ப்பரேட் கட்டமைப்புகள் காரணமாக, திவால் நிலைக்குச் செல்லும் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (எம்.எஸ்.எம்.இ) குறிப்பிட்ட தேவைகளை அவசரமாக நிவர்த்தி செய்வது அவசியம் என்று கருதப்படுகிறது.
மேலும் அனைத்து பங்குதாரர்களுக்கும் விரைவான, செலவு குறைந்த மற்றும் நிறுவனத்தின் மதிப்பு அதிகரிப்பதை உறுதி செய்வதற்காக எம்.எஸ்.எம்.இ க்களுக்கான திறமையான திவால் செயல்முறையை வழங்குவது பயனுள்ளது என்று கருதப்படுகிறது. இது எம்எஸ்எம்இ நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட வழிவகுக்கும்.
“இந்த நோக்கங்களை அடைவதற்காக, மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களாக வகைப்படுத்தப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முன்பே தொகுக்கப்பட்ட திவால் தீர்வு செயல்முறையை அறிமுகப்படுத்துவது பயனுள்ளதாக கருதப்படுகிறது.” என்று அது மேலும் கூறியுள்ளது.
0
0