“நீதிமன்ற செலவுக்கே நிதியில்லை”..! நகையை விற்று கட்டணம் செலுத்திய அனில் அம்பானி..!

26 September 2020, 8:15 pm
Anil_Ambani_UpdateNews360
Quick Share

ஒரு காலத்தில் உலகின் ஆறாவது பணக்காரராக இருந்து பூஜ்ஜிய நிகர மதிப்புக்குச் சென்ற அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் (ஏ.டி.ஏ.ஜி) தலைவரான அனில் அம்பானி, இங்கிலாந்து நீதிமன்றத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு வழக்கில் நீதிமன்றக் கட்டணங்களை செலுத்துவதற்காக தனது நகைகள் அனைத்தையும் விற்றதாக தெரிவித்தார். 

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக தற்போது விளங்கும் முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் அனில் அம்பானி இங்கிலாந்து நீதிமன்றத்தில் தான் ஒரு எளிய மனிதர் என்றும் ஒரு கார் மட்டுமே வைத்திருப்பதாகவும் கூறினார்.

2020 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் தனது நகைகள் அனைத்தையும் விற்ற பின்னர் ரூ 9.9 கோடியைப் பெற்றதாகவும், தன்னிடம் தற்போது அர்த்தமுள்ள எதுவும் இல்லை என்றும் கடனாளியாக விளங்கும் தொழிலதிபர் அனில் அம்பானி கூறினார்.

அவர் தனது கார்களைப் பற்றி கேட்டபோது அவரது வாழ்க்கை முறை பற்றிய ஊகத்தாலான ஊடகக் கதைகள் பெரிதும் மிகைப்படுத்தப்பட்டவை என்றும் அவர் கூறினார். “நான் ஒருபோதும் ரோல்ஸ் ராய்ஸை சொந்தமாக்கவில்லை. நான் தற்போது ஒரு காரை மட்டுமே பயன்படுத்துகிறேன்.” என்று அவர் தெரிவித்தார்.

கடன் மறுநிதியளிப்பு கடனுக்கான தனிப்பட்ட உத்தரவாதத்தை மீறியதாகக் கூறி மூன்று சீன நிறுவனங்கள் கொண்டுவந்த வழக்கு ஒன்றின் விசாரணையின் போது அவர் இந்த கூற்றுக்களை முன்வைத்தார்.

இந்த வழக்கைத் தாக்கல் செய்த சீன அரசுக்குச் சொந்தமான மூன்று சீன வங்கிகள் சுமார் 925 மில்லியன் டாலர் கடன் மறுநிதியளிப்பு கடனுக்கான தனிப்பட்ட உத்தரவாதத்தை மீறியதாகக் கூறப்பட்ட பின்னர், அம்பானி தங்களுக்கு 680 மில்லியன் டாலர் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியிருப்பதாக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

“எனது செலவுகள் மிகக் குறைவு. மனைவி மற்றும் குடும்பத்தினரால் அவை ஏற்கப்படுகின்றன” என்று அனில் அம்பானி மேலும் கூறினார்.

“எனக்கு பகட்டான வாழ்க்கை முறை இல்லை. வேறு வருமானமும் இல்லை. நகைகளை விற்பனை செய்வதன் மூலம் நான் சட்டரீதியான செலவைச் சந்தித்தேன். மேலும் செலவுகளைச் சந்திக்க நேர்ந்தால், பிற சொத்துக்களை விற்க நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படும்.” என்று அனில் அம்பானி கூறினார்.

Views: - 12

0

0