2021’இல் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி பெறும் ஒரே நாடாக மாறும் இந்தியா..! சர்வதேச நாணய நிதியம் கணிப்பு..!

26 January 2021, 9:24 pm
IMF_UpdateNews360
Quick Share

2021’ஆம் ஆண்டில் சர்வதேச நாணய நிதியம், இந்தியா 11.5 சதவீத வளர்ச்சி விகிதத்தை பெரும் என்று கணித்துள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் இந்த ஆண்டு இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்யும் உலகின் ஒரே பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழும் எனத் தெரிவித்துள்ளது. 

இன்று வெளியிடப்பட்ட அதன் சமீபத்திய உலக பொருளாதார அவுட்லுக் எனும் அறிக்கையில் இந்தியாவுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் வளர்ச்சி கணிப்புகள் பொருளாதாரத்தில் வலுவான மீளுருவாக்கத்தை பிரதிபலித்தன. இது தொற்றுநோய் காரணமாக 2020’ஆம் ஆண்டில் எட்டு சதவீதம் சுருங்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதன் சமீபத்திய புதுப்பிப்பில், சர்வதேச நாணய நிதியம் 2021’ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு 11.5 சதவீத வளர்ச்சி விகிதத்தை கணித்துள்ளது. இது 2021’ஆம் ஆண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்த உலகின் ஒரே பெரிய பொருளாதாரமாக இந்தியா திகழ வைக்கும் என்று அது கூறியுள்ளது.

2021’ஆம் ஆண்டில் 8.1 சதவீத வளர்ச்சியுடன் சீனா இந்தியாவிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் என்று கணித்துள்ளது. மேலும் ஸ்பெயின் 5.9 சதவீதம், பிரான்ஸ் 5.5 சதவீதம் வளர்ச்சியைப் பெறும் எனத் தெரிவித்துள்ளது.

2020’ஆம் ஆண்டில், இந்திய பொருளாதாரம் எட்டு சதவிகிதம் சுருங்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் தனது புள்ளிவிவரங்களைத் திருத்தியது. 2020’ஆம் ஆண்டில் 2.3 சதவீத நேர்மறையான வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்த ஒரே பெரிய நாடு சீனா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பொருளாதாரம், 2022’ஆம் ஆண்டில் 6.8 சதவீதமும், சீனாவின் பொருளாதாரம் 5.6 சதவீதமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய கணிப்புகளுடன், உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் பட்டியலில் முதலிடத்தை இந்தியா மீண்டும் பெறுகிறது.

Views: - 1

0

0

1 thought on “2021’இல் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி பெறும் ஒரே நாடாக மாறும் இந்தியா..! சர்வதேச நாணய நிதியம் கணிப்பு..!

Comments are closed.