2021 ஆம் ஆண்டில் சீனாவை பின்னுக்குத் தள்ளி அசுர வேகத்தில் வளர்ச்சியடையும் இந்தியா..! ஐஎம்எஃப் கணிப்பு..!

6 April 2021, 6:32 pm
Indian_Economy_UpdateNews360
Quick Share

2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 12.5 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது. இதன் மூலம் சீனாவை விட வலுவான, அதே நேரத்தில் கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய்களுக்குப் பிறகு சாதகமான வளர்ச்சி விகிதத்தைக் கொண்ட ஒரே பெரிய பொருளாதாரதாக இந்தியா இருக்கும் என ஐஎம்எஃப் கணித்துள்ளது. 
உலக வங்கியுடனான வருடாந்திர கூட்டத்திற்கு முன்னதாக வாஷிங்டனை தளமாகக் கொண்ட உலகளாவிய நிதி நிறுவனமான ஐஎம்எஃப் தனது வருடாந்திர உலக பொருளாதார பார்வையில், 2022’ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 6.9 சதவீதம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்ப்பதாக மேலும் தெரிவித்துள்ளது.

2020’ஆம் ஆண்டில், இந்தியாவின் பொருளாதாரம் எட்டு சதவிகிதம் சுருங்கியது என்று சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) கூறியது. எனினும் இந்தியா வேகமாக மீண்டெழுந்து 2021’ஆம் ஆண்டில் 12.5 சதவீத வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்யும் என்று கணித்துள்ளது.

2020’ஆம் ஆண்டில் 2.3 சதவீத நேர்மறையான வளர்ச்சி விகிதத்தைக் கொண்ட ஒரே பெரிய பொருளாதாரமாக இருந்த சீனா, 2021’இல் 8.6 சதவீதமும், 2022’ஆம் ஆண்டில் 5.6 சதவீதமும் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்ப்பதாக ஐஎம்எஃப் மேலும் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் கூறுகையில், “எங்கள் முந்தைய கணிப்புடன் ஒப்பிடும்போது 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் உலகளாவிய பொருளாதாரத்திற்கு வலுவான மீட்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். உலகளாவிய வளர்ச்சி 2021 ஆம் ஆண்டில் 6 சதவீதமாகவும் 2022 ஆம் ஆண்டில் 4.4 சதவீதமாகவும் இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

2020’ஆம் ஆண்டில், உலகப் பொருளாதாரம் 3.3 சதவீதம் சுருங்கியது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0

Leave a Reply