அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே ஆர்டர் பெறப்படும்..! அமேசான் அறிவிப்பு..!!

25 March 2020, 10:35 am
Amazon- Updatenews360
Quick Share

அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என அமேசான் தெரிவித்துள்ளது.

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வரும் உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் கொரோனாவை தடுக்கும் விதமாக நள்ளிரவு முதல் வரும் 21 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மக்கள் அத்தியாவசியத் தேவைக்கும் மட்டும் வெளியே வரவேண்டும் என்றும், தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரச எச்சரித்துள்ளது. இந்த நிலையில் பிரபல அமேசான் நிறுவனம் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் ஆர்டர் பெறப்பட்டு விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான ஆர்டர்களை பெறுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது. உணவுகள், தனி நபருக்கான பாதுகாப்பான பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து ஆர்டர் பெறப்படும் என அறிவித்துள்ளது.