இந்தியா சிமெண்ட்ஸ் இருமடங்கு வளர்ச்சி.!

25 June 2020, 1:13 pm
India Cements - Updatenews360
Quick Share

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் கடந்த நான்காவது காலாண்டில் ரூ.1,176.40 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் 2019-20 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வருவாய் ஈட்டியது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி கடந்த நான்காவது காலாண்டில் இந்தியா சிமெண்ட்ஸ் வருவாய் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 26 சதவீதம் குறைந்து ரூ.1,176.40 கோடியாக உள்ளது. இந்த வருவாயை முந்தையை ஆண்டுடன் ஒப்பிட்டால் ரூ.11.76 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 2019-20 நிதியாண்டின் மொத்த வரவாய் ரூ.5,186.45 கோடியாக இருந்தது. முந்தைய நிதியாண்டின் வருவாய் ரூ.5,770.37 கோடியாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் குறைந்துள்ளது.

ஒட்டு மொத்தமாக பெற்ற நிகர லாபம் கடந்த ஆண்டை காட்டிலும் இருமடங்கு வளர்ச்சி பெற்று ரூ.53.46 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக இந்தியா சிமெண்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.0.60 ஈவுத் தொடிகை அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம தெரிவித்துள்ளது.