கொரோனாவுக்கு பின் புதிய உச்சத்தை எட்டிய இந்திய பங்குச்சந்தை : மேலும் முதலீடுகள் வர வாய்ப்பு!!

9 November 2020, 7:25 pm
Sensex Flow High - Updatenews360
Quick Share

சர்வதேச அளவில் பங்குச்சந்தைகளில் சாதமான சூழ்நிலையால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று புதிய உச்சத்தை பெற்றுள்ளது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 12 ஆயிரத்து 452 புள்ளிகளும், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 42 ஆயிரத்து 566 புள்ளிகள் பெற்று புதிய உச்சத்தை தொட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் 41 ஆயிரத்து 600 புள்ளிகளில் இருந்த சென்செக்ஸ் கொரோனா அச்சத்தால் மார்ச் மாதம் 25 ஆயிரத்து 900 புள்ளிகள் என்ற அளவிற்கு சரிந்தது.

இதே போல கடந்த ஜனவரி மாதம் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 12 ஆயிரத்து 200 புள்ளிகள் என்ற நிலையல் இருந்து மார்ச் மாதம் கொரோன காரணமாக 7 ஆயிரத்து 735 புள்ளிகளாக சரிந்தது.

கொரோனாவில் இருந்து நாடு மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதால் முதலீடுகள் அதிகரித்து இந்தி பங்குச்சந்தை சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சங்களை பதிவு செய்துள்ளது. அக்டோபா மாதம் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் 22 ஆயிரத்து 33 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.

Sensex climbs 300 points, touches record high powered by Reliance  Industries gains

அதே போல நவம்பர் மாதம் தொடங்கியது முதல் வர்த்தக நாட்களி மட்டும் இந்திய பங்குச்சந்தைகளில் 8 ஆயிரத்து 381 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகள் வந்துள்ளன. இதற்கு அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளும் ஒரு காரணம். குழப்பமின்றி தேர்தல் முடிவுகள் வெளியானதால், மேலும் முதலீடுகள் வர வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 42

0

0