இந்திய வரி வருவாய் : அதிகரிக்கும் இழப்பு – பொருளாதார நிபுணர்கள் கருத்து

19 March 2020, 6:20 pm
TAX-UPDATENEWS360
Quick Share

இந்தியாவின் சாதாரண மற்றும் நடுத்தர மக்களிடமிருந்த நுகர்வு திறன் மிகவும் குறைத்து இருப்பது தான் இப்போது இந்திய பொருளாதார மந்த நிலைக்கான அடிப்படை மூல காரணமாக கருதப்படுகின்றது.

மேலும், இந்திய பொருளாதாரத்தில், நீடிக்கின்ற அடிப்படை சிக்கலையும், சுணக்கத்தையும் தீர்வு செய்து கொள்ளாமல், இந்திய பொருளாதாரத்தை துரிதமாக மீட்க இயலாது என்றும், பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றார்கள்.

இந்திய தொழில் நிறுவனங்களுக்கான நிறுவன வரி குறைக்கப்பட்டிருக்கின்ற காரணத்தால், மத்திய அரசங்கத்திற்கு நிரந்தரமாக வருகின்ற வரி வருவாயில்,1.45 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசாங்கம் அறிவித்து இருக்கின்றது.

மத்திய அரசாங்கம் நடப்பு நிதி ஆண்டின் ஒட்டு மொத்த வரியின் மூலமான வருவாயின் அளவினை, அதிகரித்து ஈட்டுவதற்கு மத்திய அராசங்கமானது, இலக்கு நிர்ணயித்து இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரியின் மூலமான மாநிலங்களுக்கான பங்கினை ஒதுக்குவதன் மூலமான இழப்பீடுகள் போன்றவற்றை தவிரவும், மத்திய அரசாங்கத்திற்கு பல லட்சம் கோடி ரூபாய் அளவில், வரி வருவாய் மூலமாக கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. இந்தியாவில் தற்போது நிலவி வருகின்ற பொருளாதார சுனக்க நிலையின் காரணமாக, வரி வருவாயில் பல லட்சம் கோடி அளவில் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.