மத்திய அரசின் அறிக்கையால் ஷாக்..! இந்தியாவில் தொழில்நுட்ப ரீதியான மந்தநிலை இருப்பது உண்மையா..?

27 November 2020, 7:36 pm
Steel_Industry_UpdateNews360
Quick Share

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2020-21 நிதியாண்டிற்கான, ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 7.5 சதவீதம் சுருங்கியுள்ளதாக அரசு இன்று வெளியிட்டுள்ள தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. 

2020-21’ஆம் ஆண்டின் 2’ஆம் காலாண்டில் நிலையான விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ 33.14 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2019-20’ஆம் ஆண்டின் 2’ஆம் காலாண்டில் ரூ 35.84 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 4.4% வளர்ச்சி ஏற்பட்ட நிலையில், இந்த ஆண்டு 7.5% சுருக்கத்தைக் காட்டுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, நாட்டின் பொருளாதாரம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 23.9 சதவீதம் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

 ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் கடந்த புதன்கிழமை இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மீட்கும் வேகத்தில் வலுவான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று கூறினார்.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23.9 சதவிகிதம் கூர்மையான சரிவை நாடு கண்டபின், இரண்டாம் காலாண்டில் வேகமெடுத்துள்ளதாக சக்தி காந்த தாஸ் மேற்கோள் காட்டினார்.

அடுத்தடுத்த இரண்டு காலாண்டுகளில் முரண்பாடுகளைப் பதிவுசெய்த பின்னர், ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுருக்கம் ஏற்படக்கூடும் என்றும் தொழில்நுட்ப ரீதியாக மந்தநிலைக்குள் நுழைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கை முன்பு கூறியது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி எதிர்மறையாக மாறி 8.6 சதவீதம் சுருங்கியதாகவும் ரிசர்வ் வங்கியின் பொருளாதார செயல்பாட்டுக் குறியீடு மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0