கடன் நீட்டிப்பு கிடையாது..? ரெப்போ ரேட் விகிதத்தில் மாற்றமில்லை..! ரிசர்வ் வங்கி ஆளுநர் உரை..!

6 August 2020, 1:20 pm
rbi_governor_shaktikanta_das_updatenews360
Quick Share

ரிசர்வ் வங்கி ஆளுநரும், ஆறு பேர் கொண்ட நாணயக் கொள்கைக் குழுவின் (எம்.பி.சி) தலைவருமான சக்தி காந்த தாஸ் மூன்று நாள் எம்.பி.சி கூட்டத்திற்குப் பிறகு இன்று ஊடகங்களில் உரையாற்றினார்.

இந்த ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் 115 அடிப்படை புள்ளிகள் குறைப்புக்குப் பின்னர், பாரத ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு குறுகிய கால பணத்தை வழங்கும் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 4%’ஆக வைத்திருக்க எம்.பி.சி முடிவு செய்தது.

 ரிசர்வ் வங்கி ஆளுநர் உரையின் சிறப்பம்சங்கள் :

 • ரெப்போ விகிதத்தை 4% ஆக மாற்றாமல் இருக்க எம்.பி.சி முடிவு செய்துள்ளது.
 • பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், நிதியாண்டின் இரண்டாம் பாதியில் பணவீக்க அழுத்தம் குறையும் என்று எம்.பி.சி எதிர்பார்க்கிறது.
 • தொற்றுநோய்க்கு பிந்தைய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை ஆதரிப்பது எம்பிசியின் முதன்மை குறிக்கோள்.
 • உலகளாவிய பொருளாதார செயல்பாடு பலவீனமாக உள்ளது. இது கொரோனா பாதிப்புகளிலிருந்து புத்துயிர் பெறுவதற்கான ஆரம்ப அறிகுறிகளைக் குறைத்துவிட்டது.
 • பொருளாதார நடவடிக்கைகள் மீளத் தொடங்கியிருந்தன. ஆனால் தொற்றுநோய்களின் எழுச்சி ஊரடங்கை விதிக்க கட்டாயப்படுத்தியது.
 • எம்.பி.சி ஒருமனதாக வாக்களித்து, ரெப்போ வீதம் மற்றும் தலைகீழ் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்துள்ளது.
 • கடன் வாங்கும் விகிதங்கள் ஒரு தசாப்தத்தில் மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளன.
 • ஏப்ரல் 2020 முதல் நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியாவின் பொருளாதாரம் எதிர்மையாக உள்ளது.
 • அதே சமயம் பல்வேறு வகையான பத்திரங்களில் பரிமாற்றம் நடக்கிறது.
 • உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி முதல் பாதியில் மற்றும் முழு நிதியாண்டில் எதிர்மறை மண்டலத்தில் இருக்கும்.
 • சில்லறை கடன் விகிதங்களில் நாணய பரிமாற்றம் விரைவாக நடந்துள்ளது. மார்ச் முதல் ஜூலை வரை 91 அடிப்படை புள்ளிகள் பரிமாற்றம் காணப்பட்டது
 • கூடுதல் பணப்புழக்க நடவடிக்கைகளுக்காக புதிய கொள்கை அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.
 • வங்கிகள் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.
 • கூடுதலாக 10,000 கோடி ரூபாய் சிறப்பு பணப்புழக்க ஆதரவு, நபார்ட் மற்றும் தேசிய வீட்டுவசதி வங்கிக்கு வழங்கப்படும்.
 • சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிலையான சொத்துகளாக வகைப்படுத்தும்போது, ​​உரிமையாளர்களுக்கு மாற்றமின்றி மற்றும் தனிப்பட்ட கடன்களைப் பொறுத்தவரை கடன் வழங்குநர்கள் தீர்மானத் திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக ரிசர்வ் வங்கியின் ஜூன் 7, 2019 கட்டமைப்பின் கீழ் ஒரு அமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 • இந்த கட்டமைப்பு வங்கி அமைப்பின் சிறந்த தன்மையைப் பாதுகாக்க வழிவகுக்கும். இதற்காக கே.வி.காமத்தின் கீழ் ஒரு குழு அமைக்கப்படும்.
 • மார்ச் 31, 2021 வரை தங்கக் கடன்களுக்கான கடன்-மதிப்பு (எல்.டி.வி) விகிதம் தங்கத்தின் மதிப்பில் 90% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.மார்ச் 1, 2020 வரை ‘தரநிலை’ என வகைப்படுத்தப்பட்ட கடன்களை மறுசீரமைக்க எம்.எஸ்.எம்.இ’க்கள் தகுதி பெறும்.
 • பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை அகற்ற முன்னுரிமைத் துறை கடன் வழிகாட்டுதல்களை திருத்த ரிசர்வ் வங்கி முடிவு.
 • பொருளாதாரத்தை புதுப்பிக்க தேவையான அனைத்தையும் நாங்கள் செய்வோம்.

இவ்வாறு ரிசர்வ் வங்கி ஆளுநர் பேசினார்.

ரிசர்வ் வாங்கி ஆளுநரின் உரையில் கடனை செலுத்துவதற்கான காலக்கெடு மார்ச்சிலிருந்து ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது குறித்து எதுவும் கூறாததால், மீண்டும் கடனை செலுத்துவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது என்பது உறுதியாகியுள்ளது.

Views: - 0 View

0

0