150 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்ட முதல் இந்திய நிறுவனம்..! அசத்திய அம்பானி..!

22 June 2020, 3:27 pm
Mukesh_Ambani_UpdateNews360
Quick Share

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதன் பங்கு விலையில் தொடர்ச்சியான அதிகரிப்பால் 150 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பீட்டை எட்டிய முதல் இந்திய நிறுவனமாக ஆனது. இன்று காலை வர்த்தகத்தில், நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு ரூ 28,248.97 கோடி உயர்ந்து மொத்தம் ரூ 11,43,667 கோடியாக (150 பில்லியன் அமெரிக்க டாலர்) உயர்ந்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெள்ளிக்கிழமை 11 லட்சம் கோடி சந்தை மதிப்பீட்டைக் கடந்த முதல் இந்திய நிறுவனமாக ஆனது.

நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் நிறுவனம் நிகர கடன் இல்லாததாக அறிவித்ததை அடுத்து இந்த அதிரடி வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உலகளாவிய முதலீட்டாளர்களிடமிருந்து 1.69 லட்சம் கோடி ரூபாயை திரட்டிய பின்னர் நிகர கடன் இல்லாததாக அம்பானி அறிவித்தார்.

இந்த ஆண்டு இதுவரை, நிறுவனத்தின் பங்கு 19 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.